திமுகவின் உடைய அமைச்சர் ஐ.பெரியசாமி ஏற்கனவே திமுக உடைய ஆட்சி காலம் 2006 – 2011 அமைச்சராக வீட்டு இருந்தார். அப்போது வீட்டு வாரிய வசதித்துறை அமைச்சராக இருந்தார்.  அப்போது முறைகேடாக வீடு ஒதுக்கீயதாக  அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,  வழக்கு விசாரணையில் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து அவரை விடுவித்தது.

அதேபோன்று அதிமுக உடைய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சொத்து குவிப்பு வழக்கில் அவர் மீது இருந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு இருந்தார். சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறுவிசாரணை செய்யக்கூடிய வகையில் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த இரண்டு வழக்குகளும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன்,  லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக இதில் விசாரணை நடத்தவில்லை. லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை முறையை அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருக்கின்றது. இது போன்று கீழமை நீதிபதிகள் உடைய செயல்பாடுகளை பார்க்கும்போது நீதித்துறையில் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்

இது போன்ற வழக்குகளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்து வருவதால் தன்னை வில்லனாக பார்க்கக்கூடிய சூழல் இருப்பதாகவும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தெரிவித்து இருக்கின்றாரார்.  ஏற்கனவே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அதே போன்று தமிழகத்தினுடைய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தினுடைய வழக்குகள் எல்லாம் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேசன் எடுத்திருந்தது குறிப்பிடதக்கது.