தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு,  திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை அவர் தன்னுடைய உரையிலிருந்து புறக்கணித்தார் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறினர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் ஆளுநர் உரை மீதான பதிலுரையில் ஆளுநர்  மீது அதிருப்தி தெரிவித்தார். ஆளுநர் உரையை முழுமையாக படிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

ஆளுநர் உரையை கண்டித்து மு.க ஸ்டாலின் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து பேரவையில் இருந்த தமிழக ஆளுநர் பேரவையை விட்டு வெளியேறினார். பேரவை முடிவதற்கு முன்பு ஆளுநர் வெளியேறியது தமிழக சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.