தமிழக ஆளுநர் தன்னுடைய உரையில் சில வார்த்தைகளை விட்டுவிட்டு படித்தது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்றில் இதுவரை பின்பற்றி வந்த வழிமுறைகளை ஆளுநர் மீறி இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை முன் வைத்து வருகிறார்கள். தமிழ்நாடு அமைதி பூங்கா என்ற வாசகத்தையே தமிழக ஆளுநர் தன்னுடைய உரையில் தவித்திருப்பதாகவும் தற்பொழுது அண்மை தகவலானது வெளியாகி இருக்கிறது.

46வது பக்கத்தில் இரண்டாவது பாராவில் மூன்று வரிகளை தவிர்த்து விட்டு ஆளுநர் தன்னுடைய உரையை நிகழ்த்தி இருக்கிறார். ஏற்கனவே மூன்றாவது பக்கத்தில் இருந்த ஐந்து வரிகளை அவர் தவித்து இருப்பதாகவும்,  அதில் திராவிட மாடல் என்ற வார்த்தையை அவர் தவிர்த்து இருந்தது. அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழ்நாடு அமைதி பூங்கா என்ற வாசகத்தையும் தமிழக ஆளுநர் தவிர்த்து தன்னுடைய உரையை நிகழ்த்தி இருக்கிறார்.