கடந்த 9 நாள்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, 10-வது நாளான இன்று (செப். 3) சற்று குறைந்துள்ளது.

சவரனுக்கு ரூ.80 குறைவடைந்து, தற்போதைய விலை ரூ.78,360 ஆக இருக்கிறது. அதேபோல் ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.9,795 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாள்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,000 வரை உயர்ந்த நிலையில், இன்று வெறும் ரூ.80 மட்டுமே குறைந்தது குறிப்பிடத்தக்கது. தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் இந்த சிறிய விலை குறைவால் திருப்தி அடைந்துள்ளனர்.