ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில் பல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இதுவரை 101 பேர் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. 55 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.