
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தியே என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ள சீமான், 20 தொகுதிகளில் பெண்கள், 20 தொகுதிகளில் ஆண்கள் என 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தான் போட்டியிடுவார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.