பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று தைலாபுரம் தோட்டத்தில் கூடுகிறது. அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் அவ்வகாசத்தில் எந்த பதிலும் அளிக்காததால், இன்று நடைபெறும் கூட்டத்தில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்த முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
கட்சியின் உள்துறை விவகாரங்களில் நீண்டநாள் கருத்து வேறுபாடுகள் நிலவிவந்த நிலையில், இந்த நடவடிக்கை பாமக அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி கட்சியின் முக்கிய முகமாகக் கருதப்பட்ட நிலையில், அவர் நீக்கப்பட்டால் பாமக எதிர்கால கூட்டணிகள் மற்றும் அரசியல் கணக்கில் பெரிய மாற்றங்கள் உருவாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
