சில மாதங்களாக ஆபரணத் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 19) தங்க விலையில் சிறிய அளவில் குறைவு பதிவாகியுள்ளது. சென்னை சந்தையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9,235 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலையுடன் சேர்த்து வெள்ளி விலையும் நிலையாகவே உள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.126க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தினசரி விலை மாற்றத்தால் பொதுமக்கள் தங்கம் வாங்கும் திட்டத்தில் குழப்பத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.