இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம், அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் அவர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் தற்போது ஒன்பதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறும்போது 12 வருடம் மோடியின் ஆட்சிக்காலத்தில் அந்த நாட்டின் பொருளாதார நிலைத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளோம். அதன் பிறகு உலக நாடுகளுடன் இந்திய அழகாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், விக்சித் பாரத்தை நோக்கி இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் தொடர்ந்து அவர் மத்திய பட்ஜெட்டில் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறார். குறிப்பாக பயோ பார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
