சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தளத்தில் இருந்து திடீரென ஊற்று போல தண்ணீர் பீறிட்டு வெளிவந்த வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சியில், டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை திடீரென உடைந்து, சுடுநீர் ஊற்று போல தண்ணீர் ஆக்ரோஷமாக வெளியேறுவதைக் கண்டு நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர். இது ஏதோ அதிசயமோ அல்லது பூகம்பத்தின் அறிகுறியோ என்று மக்கள் பீதியடைந்த நிலையில், உண்மை பின்னணி குறித்து விசாரித்தபோது, அந்த வீட்டின் அருகில் உள்ள காலி மனையில் புதிய போர்வெல் (Boring) அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
போர்வெல் போடும்போது பூமிக்கடியில் ஏற்பட்ட அதீத அழுத்தம் மற்றும் நிலத்தடி நீர்மட்ட சமநிலையின்மை காரணமாக, அந்த அழுத்தம் பக்கத்து வீட்டின் தரைப்பகுதியை உடைத்துக் கொண்டு தண்ணீராக வெளியேறியுள்ளது. இந்த ‘ஷாக்’ வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது!
छत्तीसगढ़ : बिलासपुर के एक घर में अचानक फर्श से निकला पानी
◆ CCTV में कैद हुई घटना, वीडियो सोशल मीडिया पर हुआ वायरल
◆ लोगों के मुताबिक पास के एक प्लॉट में नई बोरिंग का काम चल रहा था और उसी दौरान जमीन के नीचे दबाव असंतुलन बना#Chhattisgarh | Chhattisgarh | #Bilaspur pic.twitter.com/m0vZUPxSMx
— News24 (@news24tvchannel) February 1, 2026
“>
