சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர். அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

நெல்லை, கும்பகோணம், மதுரையில் நடந்த கூட்டங்களில் மோதல் ஏற்பட்ட நிலையில், ஓமலூரில் கள ஆய்வு கூட்டம். வருகிற 2026-ல் அதிமுக ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தொண்டர்கள், நிர்வாகிகளின் களப்பணி இருக்க வேண்டும் என ஈபிஎஸ் கூறியுள்ளார்.