தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மரக்கடையில் இன்று தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இன்று காலை திருச்சி வந்தடைந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் தற்போது தான் மரக்கடையில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் முதல் முறையாக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டது ஏன் என்பதற்கான காரணம் குறித்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.
அதாவது 2026 தேர்தலில் அடுத்த வருடம் ஜனநாயகப் போர் நடைபெற உள்ளது. போருக்கு முன்னர் குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்வதை போல் 2026 தேர்தலுக்கான முதல் களமாக திருச்சியை தேர்வு செய்துள்ளேன். திருச்சியில் தொடங்கினால் அனைத்தும் திருப்புமுனையாக அமையும் என்பார்கள். அரசியலில் பல்வேறு திருப்பங்களை திருச்சி நகரம் கொடுத்துள்ளது. அறிஞர் அண்ணா போட்டியிட விரும்பிய இடம், எம்ஜிஆர் மாநாடு நடத்திய இடம் மற்றும் பெரியார் வாழ்ந்த இடம் என திருச்சிக்கு பல சிறப்புகள் இருக்கிறது. இதனால்தான் திருச்சியில் முதல் பிரச்சாரத்தை மேற்கொண்டேன் என்றார்.
