தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சிகளை தொடங்கியுள்ள விஜய் மற்றும் திருச்சி மரக்கடை பகுதியில் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இன்று காலை திருச்சி வந்தடைந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரமாக கடந்து தற்போது மரக்கடை பகுதியை அடைந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட இருக்கும் நிலையில் அந்த கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில் அவருக்கு திருச்சியில் தொண்டர்கள் கொடுத்துள்ள வரவேற்பு தமிழக அரசியல் வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் பிரச்சார கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, திருச்சியில் தொடங்கினால் அனைத்தும் திருப்புமுனையாக அமையும் என்று கூறுவார்கள்.

உங்களை இப்படி பார்ப்பது எனக்கு மிகவும் பரவசமாக இருக்கிறது. மதசார்பின்மைக்கு பெயர் பெற்ற திருச்சி கொள்கைக்கான மண். உங்களைப் பார்த்தவுடன் ஒரு எமோஷனல் கனெக்ட். மனதில் ஒரு பரவசம். மலைக்கோட்டை பிள்ளையார், தந்தை பெரியாருடைய இடம் என திருச்சிக்கு தனி பெருமை இருக்கிறது.

நான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனநாயகப் போருக்காக தற்போது உங்களை சந்திக்க வந்துள்ளேன். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறுவது ஜனநாயகப் போர் என்றும் குலதெய்வமாக மக்களை சந்திக்க வந்துள்ளேன் என்றும் விஜய் ஆரவாரமாக பேசி வருகிறார்.

அதன் பிறகு நடிகர் விஜய் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் No compromise என்றார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்தால் நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டும் நாங்கள் செயல்படுத்துவோம் என்று விஜய் முதல் வாக்குறுதியை கொடுத்தார்.