தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. வங்க கடலில் மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புவதை உறுதி செய்யவும் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.