தமிழகத்தில் 10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். மேலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.