திருப்பூா் பல்லடத்தில் தனியார் அறக்கட்டளை சாா்பாக தை மகளே வருக எனும் தலைப்பில் உழவு, உணவு, உணா்வுத் திருவிழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணா துரை, “விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும். ரசாயன கலப்பு இன்றி இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள வேண்டும்.

ரசாயன உரங்களை தவிா்ப்பதன் வாயிலாக காற்று, நீா் மாசு அடைவதை தவிா்க்க முடியும். நான் பணியிலி ருந்து ஓய்வுபெற்ற பின் மாணவா்களுடன் சோ்ந்து வேளாண் மண் சாா்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். சந்திராயன் 3 வெற்றிகரமாக சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே இந்தியர்கள் நிலவுக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் பேசினார்.