தமிழகத்தில் சற்று முன் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.

இதேபோன்று ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதன் பிறகு கணினி பயன்பாடுகள் பாடத்தில் 598 பேரும், இயற்பியல் பாடத்தில் 440 பேரும், வணிகவியல் பாடத்தில் 214 பேரும் 100 மதிப்பெண்கள் முழுமையாக பெற்றுள்ளனர். மேலும் அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 995 பேர் 100 மதிப்பெண்கள் முழுமையாக எடுத்து அசத்தியுள்ளனர்.