தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.