பிரபல youtuber பைக் ரேசர் டிடிஎஃப் வாசன் ரத்து செய்யப்பட்ட தன்னுடைய ஓட்டுனர் உரிமத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக விபத்தில் சிக்கி ஆபத்து விளைவிக்கும் வகையில் வண்டி ஓட்டிய காரணத்திற்காக அவருடைய ஓட்டுநர் உரிமம் 10 வருடங்களுக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்த உத்தரவிட்டது.