தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு மாதத்திற்கு மேல் கோடை விடுமுறையில் இருந்த மாணவர்கள் இன்று மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூ கொடுத்து வரவேற்றனர். அதேசமயம் இன்றே மாணவர்களுக்கு பாடநூல், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.