சென்னையில் ஆபரணதங்கத்தின் சந்தையில் இன்று மிக வேகமாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை , ஒரு சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து 1 கிராம் ரூ.9370 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.74,960 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து குறைந்த விலையில் விற்பனையாகி வந்த தங்கம், இன்று ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்து, மீண்டும் ரூ.74 ஆயிரத்தை கடந்துள்ளது. வர்த்தகர்கள், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வும், கொள்முதல் எண்ணிக்கையும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
