தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்பலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் தான் இருக்கிறார். அவரது உடல்நலம் சீராக இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினை மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,
முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. இன்று அப்பல்லோ மருத்துவமனை முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் தொடர்பாக அறிக்கை வெளியிடும். அதன்பிறகு டிஸ்டார்ஜ் குறித்த தகவல்கள் வெளிவரும். முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சகோதரர் மு.க முத்துவின் மறைவு செய்தியால் ஒரு நள் முழுவதும் சாப்பிடாததோடு இறுதி சடங்கில் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தே சென்றார். மேலும் அவர் நாள் முழுவதும் சாப்பிடாமல் நின்றபடியே இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றார்.
