சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது நல்ல முன்னேற்றத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய உடல் நலத்தினை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்தவாறே முதல்வர் ஸ்டாலின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் மக்கள் குறைகள் குறித்து காணொலி வாயிலாக நேரடியாக கலந்துரையாடினார். இது அவருடைய உடல்நிலை மேம்பட்டிருப்பதற்கான உறுதியான அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும், சிகிச்சைக்குப் பிறகு முதன்முறையாக வெளியான அவரது புகைப்படமும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மருத்துவமனையில் இருந்து மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#UngaludanStalin pic.twitter.com/YuwnpIvfUE
— கல்கி குமார் (@kalgikumaru) July 23, 2025
“>
