நேற்று ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.30 குறைந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரக தக்காளி ரூ.120க்கும், 2ஆம் ரக தக்காளி ரூ. 80க்கும், மூன்றாம் ரக தக்காளி ரூ.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் விளையும் தக்காளி விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளதால், விலை வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது. இதனால், குடும்ப தலைவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.