தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்த பிறகு கூட்டணி ஆட்சியை முன்மொழிந்தது. திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி ஆட்சியின் இடம்பெற்றுள்ளது. இதில் காதர் மொய்தீன் திமுக கூட்டணியிலிருந்து விலகியது மற்றும் விலகாதது குறித்து நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் திருமாவளவனும் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

அதே நேரத்தில் இவர்கள் இருவருமே தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளனர். மேலும் இதன் காரணமாக சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சமீபகால செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் தனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக முன்னாள் எம்எல்ஏ  பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,  “சமீப காலமாக தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது அரசியல் களத்திலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் அரங்கில் விசிக தலைவரின் தொடர் முரண்பாடான பேச்சுகள், களப்பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை விளைவித்து வருவதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.