சென்னை அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் முதல்வர் ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் சற்று முன்னதாக மருத்துவ பரிசோதனைக்காக சென்றார். இந்நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பின் நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது ரோட்டின் ஹெல்த் செக்கப் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.