தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பள்ளிகளில் விளையாட்டு பாட வேலைகள் இருந்தாலும் கூட மாணவர்களை விளையாட்டு வகுப்பிற்கு அனுப்பாமல் வேறுபாடங்களை அந்த வகுப்பில் கற்பிப்பதாகவும் புகார் எழுந்து வரும் நிலையில் கட்டாயமாக ஆசிரியர்கள் மாணவர்களை விளையாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பல்வேறு பள்ளிகளில் விளையாட்டு திடல்களே இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறியுள்ள அவர் தமிழக அரசு இதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் கிட்டத்தட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் இருக்கிறது. அவற்றில் 80 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டோடு கூடிய கட்டாய கல்வி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துள்ளார்.