தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு குறைவான விலையில் மிக விரைவான மற்றும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் இ சேவை என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திலேயே அனைவருக்கும் இ சேவை என்ற திட்டத்தில் 24 ஆயிரத்து 823 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பத்தில் 24,500 பேருக்கு இ சேவை மையம் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்திற்கு இணையாக தமிழ்நாட்டிலும் 50 ஆயிரம் இ சேவை மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே இசேவை  மையம் தொடங்க விருப்பமுள்ளவர்கள் https://tnega.tn.giv inஎன்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.