தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் தயாரிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆவதாக இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் படம் வெளியாகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதாவது ஜனநாயகன் வழக்கில் தனி நீதிபதி உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில் அதற்கு சென்னை தலைமை நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அதோடு பட குழுவின் அவசரத்திற்கு எல்லாம் விசாரணை செய்ய முடியாது எனவும் சென்சார் வாரியத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த தெறி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என தற்போது தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். மேலும் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த தெறி திரைப்படம் ஜனவரி 15ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என தற்போது அறிவிப்பு வெளிவந்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.