மேற்கு வங்காளத்தில் கடந்த மாதம் 294 சட்டசபை தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெருங்கட்சியாக உருவாகி ஆட்சி அமைத்துள்ளது. வங்கத்தில் மம்தாவின் சாம்ராஜ்யத்தை சரித்து முதல் முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் மம்தா பானர்ஜியை இருமுறை சொந்த தொகுதியில் தோற்கடித்த சுவேந்து அதிகாரியை பாஜக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தது.

இந்த நிலையில் இன்று மேற்கு வங்கத்தின் 9-வது முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். மேலும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் ஆளுநர் ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த நிலையில் பிற எம்எல்ஏக்களும் அடுத்தது பதவி பிரமாணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.