தமிழக அரசியலின் தவிர்க்க முடியா ஆளுமை மூக்கையா தேவர். தென் மாவட்டங்களில் இவரது பெயரை அறியாதவர்களே இருக்க முடியாது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் இணைந்து தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் மூக்கையா தேவர். அவரது மகனான உசிலம்பட்டி முத்துராமலிங்கம் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அரசியல்வாதிகள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று அவர் அண்ணாமலையை பாராட்டினார்