டெல்லி விமான நிலையத்தில் ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள INDIA கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அப்போது NDA கூட்டணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்த சந்திரபாபுவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.