தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து 107 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. இந்நிலையில், தவெக-வின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்துகாங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக  இந்திய ஜனநாயக முஸ்லிம் லீக் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இஇதன் காரணமாக தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார். ஏற்கனவே நான்கு முறை ஆளுநரை விஜய் சந்தித்த நிலையில் இன்று ஐந்தாவது முறையாக சந்திக்க பட்டினம் பாக்கம் இல்லத்திலிருந்து கிளம்பினார். ஆனால் ஆளுநர் விஜயை சந்திக்க நேரம் கொடுக்காததால் மீண்டும் யூடர்ன் அடித்து வீட்டிற்க்கே திரும்பிய நிலையில் தற்போது அவரது கேரளா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மறுபடியும் விஜய்க்கு அனுமதி கொடுத்துள்ளார். இதனால் வீட்டிற்கு திரும்பிய விஜய் மறுபடியும் வண்டியை யூடரன் அடித்துவிட்டு ஆளுநர் மாளிகை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். மேலும் ஆளுநர் ஆட்சி அமைக்க ஒப்புதல் இன்று வழங்குவதோடு விஜய் விருப்பப்பட்டால் நாளைய பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.