
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 640 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9100 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விளையும் உயர்ந்து ஒரு கிராம் 9928 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79424 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 119 ரூபாய்க்கும், ஒரு சவரன் 119000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.