உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவர்கள் குழு ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தை பார்க்க தேமுதிக நிர்வாகிகள், ரசிகர்கள் அதிகளவில் வரக் கூடும் என்பதால், மியாட் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.