திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் உடல் நல குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருவதாகவும் அவரை பார்க்க முதல்வர் ஸ்டாலின் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.