சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்று விலை காலையில் குறைந்த நிலையில் மாலை அதிரடியாக 1200 ரூபாய் வரையில் உயர்ந்தது. இந்த நிலையில் இன்று யாரும் எதிர்பாராத விதமாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி தற்போது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,505 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15824 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,26,592 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
