தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, அவர் போட்டியிடக்கூடும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியில் நாளை நடைபெறவிருந்த பரப்புரைக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்துள்ளனர்.
பரப்புரை திட்டமிடப்பட்ட இடம் மிகவும் நெருக்கடியான பகுதி என்றும், அங்கு மக்கள் கூடினால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படும் என்றும் கூறி போலீசார் இந்த தடையை விதித்துள்ளனர்.
மேலும், மாற்று இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறும் தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கையால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட அக்கட்சி முடிவு செய்துள்ளது.
பெரம்பூர் தொகுதியைக் குறிவைத்து விஜய் தனது அரசியல் நகர்வுகளைத் தொடங்கியுள்ள வேளையில், போலீசாரின் இந்த ‘நோ’ சொல்லும் பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
