விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகன ஓட்டுனர் கொலையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அதாவது காளிக்குமார் (33) என்பவர் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மருத்துவமனையின் முன்பாக உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான குழு அங்கு சென்றது.

அந்த சமயத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இவர்களை தடுக்க காவல்துறையினர் முயற்சி செய்தபோது டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். அதோடு காவலர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தினர். இது விவகாரத்தில் 4 பேர்‌கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதன்படி டிஎஸ்பி தலைமுடியை பிடித்து இழுத்த பாலமுருகன் (30) உட்பட 4 பேரை  காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.