புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி 30 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல்முறையாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேறு வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று காலை முதலே என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை யில் இருக்கிறது.
அதன்படி என்ஆர் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மேலும் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு தொகுதியில் கூட முன்னிலை கிடைக்காதது விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
