கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ரூ.44,480- க்கும், கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ரூ.5,560- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 1.30 காசுகள் உயர்ந்து 74.40க்கும், ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.