பிரபல நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானவர் வெங்கட்ராஜ். இவர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வெங்கட்ராஜ் இன்று மரணமடைந்தார்.
இவர் கடந்த சில காலங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மரணம் அடைந்தார். மேலும் இவரின் மரணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
