மறைந்த முன்னாள் தெலுங்கு நடிகர் அல்லு ராமலிங்கையாவின் மனைவி அல்லு கனகரத்தினம் (94) இன்று (ஆகஸ்ட் 30) காலமானார். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை வழி பாட்டியும், நடிகர் ராம் சரணின் தாய்வழி பாட்டியும் ஆவார்.
Allu Kanakaratnamma, Paternal Grand Mother of Allu Arjun, passed away today, may she rest in peace 🙏🏻
Stay strong @alluarjun anna, we’re with you 🫂 pic.twitter.com/4cZljgcDjq
— ABHI (@nenu_abhii) August 30, 2025
“>
அல்லு கனகரத்தினம் மரணம், திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அல்லு குடும்பத்தினர் இருக்கும் இடத்தில் துயர் சூழ்ந்த நிலையில், அடுத்தடுத்த நடிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலிகள் செலுத்தி வருகின்றனர்.
