பிரபல இயக்குநரும் நடிகருமான ராமதாஸ் இன்று காலமானார். 1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.