பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சுனில் செட்டி. இவர் தமிழில் தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். இவருடைய மகள் அதியா செட்டியும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டருமான கே.எல் ராகுலும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இவர்களுடைய திருமண ஏற்பாடுகள் மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அருகே உள்ள நடிகர் சுனில் செட்டிக்கு சொந்தமான மிகப்பெரிய பண்ணை பங்களாவில் நடைபெற இருக்கிறது.

நேற்று இரவு நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்  இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் பம்பாய் படத்தில் இடம்பெற்ற ஹம்மா ஹம்மா பாடல் மற்றும் பதான் படத்தில் இடம்பெற்ற பேஷ்ரங் பாடல் போன்ற ஹிந்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு நடனமாடினர். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by HT City (@htcity)