நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னதாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். சீமான் தன்னுடைய முன்னாள் கணவர் என்று விஜயலட்சுமி கூறும் நிலையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் கொடுத்திருந்தார்.
குடும்பப் பிரச்சனை மற்றும் திரைத்துறை பிரச்சனையால் தான் விஜயலட்சுமியின் குடும்பம் சீமானை அனுகியுள்ளது. அப்போதுதான் திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் உறவு வைத்துள்ளார். எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்ற நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நடிகர் விஜயலட்சுமி வளசரவாக்கம் போலீசாரிடம் புதிய ஆதாரங்களை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை 5 மணி நேரமாக நீடித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
