முதல்முறையாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இனிமேல், 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால், மறுமதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு திட்டம் அமலில் உள்ள நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.