தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே உள்ள பழைய திட்டங்கள் தொடரும் என்றும் அதுபோக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். குறிப்பாக எல் நினோவால் 12 மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 2026-27 ஆம் ஆண்டில் மும்முனை மின்சாரம் வழங்குவதற்காக ரூ.7432 கோடி மின்வாரியத்திற்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்துக்கு ரூ.203.64 கோடி ஒதுக்கீடு.
மண்ணின் வளத்தை பாதுகாக்க தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு.
பருத்தி உற்பத்தியை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு. ரூ.27.21 கோடி ஒதுக்கீடு
காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேத தடுப்பு திட்டம் உருவாக்கப்பட்ட அதற்காக ரூ.7.35 கோடி ஒதுக்கீடு.5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிகளுக்கான நம்மாழ்வார் மீது வழங்கப்படும் நிலையில் அதற்காக 11 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் காடுகள் 11 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த சிறுகுறு விவசாயிகளுக்கு உயர் மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு இவர்களுக்காக மின்மோட்டார் சூரிய சக்தி பம்பு செட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகளுக்கு 100% மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெயிலில் இருந்து விளைபொருட்களை பாதுகாக்க 43500 தார்பாய்கள் வழங்கப்படும் நிலைகள் இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்திற்கு 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகித்திற்காக மானியம் வழங்கப்படுவதற்கு மாநில அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் 34.72 கோடி ஒதுக்கீடு.
ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் மற்றும் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலுக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
விதை சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் அதற்காக 7.1 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி விவசாயி விருதுகள் வழங்கப்படும். அதன்படி நெல் வகைகளில் இறவை மற்றும் மானாவாரி உற்பத்தி செய்யப்படுவதோடு சோளம், கம்பு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை மற்றும் பருத்தி குறைந்தது 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்வதோடு 9 பயிர்களுக்கு 90 விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகையாக 67.57 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
வெற்றி இல்லத்தரசி வீடு தோட்ட திட்டத்திற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
57,000 மெட்ரிக் டன் அளவிற்கு வெங்காயம் சேமிப்பதற்காக 22 கோடி மதிப்பீட்டில் புதிய கிடங்குகள் உருவாக்கப்படும்.
வனமகள் திட்டம் உருவாக்கப்பட்டு 100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி கற்று கொடுக்கப்படுவதோடு 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் புதிய டிரோன்கள் வழங்கப்படும். இதற்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
