கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை இன்று (அக்.13) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணையின் பின்னணியில், சம்பவத்தின் முழுமையான உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் எனக் கூறி, அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தவெக உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.
நீதி வெல்லும்!
— TVK Vijay (@TVKVijayHQ) October 13, 2025
“>
இந்நிலையில், கட்சி தலைவர் விஜய், தனது X தளத்தில் “நீதி வெல்லும்” என பதிவிட்டுள்ளார். இதனால், கரூர் சம்பவத்தில் உரிய நீதியும், உண்மையும் விரைவில் தெரியவரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
