
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 76 ரன்கள் வரை எடுத்தார். அதற்கு அடுத்தடுத்து வந்த இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இறுதியில் இந்திய அணி 49 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து 4விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு தற்போது பிரபலங்கள் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியானது. இதற்கு தற்போது ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது தற்போதைக்கு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.